Advertisment

பண்ணை வீட்டில் கொள்ளை... தீவிர விசாரணையில் போலீசார்!

theft at home Police in serious investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கானாங்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயலு மகன் ராஜேஷ் கண்ணா (51). இவர் வசதி படைத்த பண்ணை வீட்டுக்காரர். ஒரு வாரத்திற்கு முன்பு, திருவண்ணாமலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றவர் நேற்று முன்தினம் (12.12.2021) ஊருக்குத் திரும்பிவந்துள்ளார்.

Advertisment

அப்போது பூட்டப்பட்ட அவரது வீட்டின் பின்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை, 12 கிலோ வெள்ளி பொருட்கள், 32 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதோடு, தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவுசெய்து, அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

kallakurichi Theft
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe