Theft in Government doctor home

Advertisment

திருச்சி மாவட்டம், உறையூர் ராமலிங்க நகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவண குமார் (48). இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று பெரம்பலூர் வரை தன் சொந்தப்பணிக்காகச்சென்றுள்ளார். அவர் மீண்டு திருச்சி வந்தது தனதுவீட்டிற்குச்சென்றபோது, அவரதுவீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உறையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார்அடிப்படையில்போலீசார்அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்தபோலீசார்கொள்ளையர்களைத்தேடி வருகின்றனர்.