Advertisment

திமுக மகளிரணி மாவட்ட செயலாளர் வீட்டில் திருட்டு...

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் வசிப்பவர் வேலூர் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி செயலாளர் கவிதா தண்டபாணி. அவரது கணவர் அரசு பள்ளி ஆசிரியராகவுள்ளார்.வேலூரில் மே 10 ந்தேதி மாலை திமுக பிரமுகர் ஒருவரின் திருமண மஹால் திறப்புவிழா நடைபெற்றது. அதற்காக குடும்பத்துடன் சென்றவர்கள் நள்ளிரவை கடந்தே வீட்டுக்கு வந்துள்ளார்கள்.

Advertisment

theft at dmk worker home

வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது, அதிர்ச்சியாகி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 சவரன் தங்க நகை, 1 லட்சத்து 80ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வீட்டிலிருந்த LED டிவி ஆகியவை காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தந்த நிலையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கவிதா தண்டபாணி 2016 சட்டமன்ற தேர்தலின் போது ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுகவை சேர்ந்த தற்போதைய அமைச்சர் வீரமணியை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe