Advertisment

துணிக்கடையில் திருட்டு; அதிர்ச்சி கொடுத்த சிசிடிவி காட்சி

Theft at a clothing store; CCTV footage goes viral

மதுரையில் துணிக்கடை ஒன்றில் கல்லாப்பெட்டியில் இருந்து சிறுவன் ஒருவன் 62,000 ரூபாய்திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும்ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் அஜித் என்பவர் துணிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து சிறுவன் ஒருவன் பணப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் சென்றான். கடையில் பணம் திருடப்பட்டதாக காவல்துறையில் கடை நிர்வாகத்தினர் புகார் அளித்திருந்தனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது சிறுவன் ஒருவன்திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

சிறுவன் ஒருவன் பணப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

children madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe