/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1225.jpg)
திருச்சியில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே.நகரில் உள்ளசுந்தர்நகரைச் சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மனைவி அஷ்ரப் பேகம் (வயது 40). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அவருடைய தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த ஒன்றரை பவுன் ஜிமிக்கி மற்றும் ரூ. 2000 பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர். வீட்டிற்கு திரும்பி வந்த அஷ்ரப் பேகம் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இச்சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலேயேசுந்தர்நகர் 2வது தெருவைச்சேர்ந்த ஜேம்ஸ்என்பவரது மகன் எடிசன்(36) என்பவரது வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது.சம்பவத்தன்று எடிசன் வீட்டை பூட்டிவிட்டு வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டநிலையில், மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டுக்கதவின்பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையில் இருந்த ஒன்றேகால் பவுன் கழுத்துச்சங்கிலி மற்றும் ரூ. 1500 பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பிறகு வீட்டிற்கு வந்த பார்த்த எடிசன் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து எடிசன் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் மற்றும் நகையைத்திருடிய மர்ம ஆசாமிகளைத்தேடிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)