theft by debt; Teen trapped by CCTV footage

Advertisment

கடன் தொல்லை தாங்க முடியாமல் இளம்பெண் ஒருவர் நகைக் கடையில் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள புளியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் குடும்ப வறுமை காரணமாகசில இடங்களில் கடன் வாங்கி இருந்த நிலையில், கடனை கட்ட முடியாத நிலை தொடர்ந்தது. இதனால் கடன் கொடுத்தவர்கள் காயத்ரியிடம் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வந்த நிலையில், கடன் தொல்லை தாங்க முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்திற்குச் சென்ற காயத்ரி அங்கிருந்த நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து இரண்டு தங்கச் சங்கிலி திருடிச் சென்றார். காயத்ரி திருட்டில் ஈடுபட்டதை சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அறிந்து கொண்ட கடை நிர்வாகத்தினர் இது தொடர்பாக விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளின்அடிப்படையில்விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட காயத்ரியை கைது செய்தனர்.