
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி, நேரு நகரைச் சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் (40). இவர் தனியார் வங்கியில் கிளை மேலாளராக உள்ளார். இவரது மனைவி இளவரசி (37), அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். நேற்று (30.07.2021) காலை இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
மாலையில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த இளவரசி, வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, அறையின் உள்ளே பீரோவில் இருந்த வளையல், மோதிரம், செயின் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு 3.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசுக்கு இளவரசி கொடுத்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து, திருடர்களைத் தேடிவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)