Theft Automobile shop!

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவர் கடந்த 12ஆம் தேதி கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், 13ஆம் தேதி அவர் மீண்டும் கடைக்கு வந்தபோது, கடையின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு கடையில் இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிப்பாகங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ராமகிருஷ்ணன் துறையூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.