Advertisment

அதிமுக பிரமுகர் வீட்டில் திருட்டு- வடமாநில இளைஞர்களின் கைவரிசையா? போலீஸ் விசாரணை!

வேலூர் மாவட்டம் வாலாஜா நகராட்சியின் முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி. அதிமுகவை சேர்ந்த இவர் அதிமுக ந.செ வாகவும் இருந்தார். தற்போது, அதிமுக வேலூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவராகவுள்ளார். இவரது வீடு வாலாஜா நகரில் சவுக்கார் தெருவில் உள்ளது.

Advertisment

 Theft of the AIADMK personalities

25ந்தேதி இரவு வீட்டுக்கு வெளியே உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்கள். 26ந்தேதி விடியற்காலை வாசலில் இருந்து எழுந்து வீட்டுக்குள் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தது. அதோடு பீரோவும் உடைக்கப்பட்டுயிருந்தது.

Advertisment

 Theft of the AIADMK personalities

பீரோபில் இருந்த 5 பவுன் தங்க நகை, 5 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுயிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியான விருதகிரி. இது தொடர்பாக வாலாஜா நகர காவல்நிலையத்தில் புகார் தந்தார். அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். அதில் விருதகிரி வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை வானத்தை பார்த்து திருப்பி வைத்துவிட்டு முகமுடி அணிந்த நான்கு பேர் வீட்டுக்குள் வருவது வரை பதிவாகியிருந்தது.

அவர்கள் உருவம் வடமாநில இளைஞர்களைப்போல் உள்ளது என முடிவுக்கு வந்த போலிஸார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

police Theft Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe