Advertisment

''அது தவறுதான்...''- ஆறுதல் கொடுத்த அமைச்சரின் அறிவிப்பு! 

'' That's wrong ... '' - Minister's consolation announcement!

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து மார்ச் 12 ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கும் நிலையில் மதியம் 12.30 க்கும் விடைத்தாளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் ஒன்றரை மணிநேரம் கிரேஸ் டைமும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் விடைத்தாளை பதிவேற்றம் செய்யாத மற்றும் கால அவகாசத்தை கடந்து விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை குறிக்கும் வகையில் 'ஆப்செண்ட்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்சென்ட் போடப்பட்டதால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேபோல் தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாளை திருத்த வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வந்த பேராசிரியர்களிடம் முன்னரே அறிவுறுத்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

Advertisment

ponmudi

இந்நிலையில் 'தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்தற்கு ஆப்செண்ட் போடப்பட்டு இருந்தால் தவறு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத் தாள்களுக்கு ஆப்செண்ட் போடப்பட்டு இருந்தால் அது தவறானது. தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாளும் திருத்தம் செய்யப்படும். அதேநேரம்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும். ஆன்லைன்தேர்வுகளால்கல்வியின்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த தகவல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும்தந்துள்ளது.

student Ponmudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe