tamilaruvi manian press meet

Advertisment

அண்மையில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல்இந்த அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்பிறகு கூட்டணி, கட்சிப் பெயர் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகிவந்த வண்ணம் இருந்தன.

Advertisment

அதேபோல், அவர் அறிவிக்கப்போகும் கட்சியின் பெயர் இதுதான் என்பது போன்றவியூகங்களும்ஊடகங்களில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழருவி மணியன், ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான் கட்சியின் பெயர் என விளக்கமளித்திருக்கிறார்.

சென்னையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் அடிப்படை கட்டமைப்பு தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான் கட்சியின் பெயர் எனக் கூறினார்.