/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4962.jpg)
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம்(41). இவர், மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் செஞ்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை வளத்தி - மேல்மலையனூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார் பூங்காவனம். அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர்.
இதில் துணை வட்டாட்சியர் பூங்காவனம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. துணை வட்டாட்சியர் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா அல்லது பணிச் சுமை காரணமா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)