Advertisment

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை  பள்ளி மாணவர்களுக்கு  பாடமாக்க வேண்டும் -தங்கர் பச்சான்

ட்

நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

Advertisment

’எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்?

Advertisment

மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர். நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும்.

எதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர கடமை இருக்கிறது!

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.

Thankar Bachan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe