தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும்’ புத்தகத்தின் 2ஆம் பாகத்தை எழுதியிருந்தார். இந்நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (21.07.2025) நடைபெற்றது. அப்போது துர்கா ஸ்டாலின் பேசுகையில், “எங்கள் அழைப்பை ஏற்று அவரும் நானும் 2ஆம் பாகம் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கட்சித் தலைவராக அவருக்கு பல்வேறு பணிகள் இருந்தாலும் ஒரு கணவராக எனக்காக நேரம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாமல் தனக்குக் கிடைத்த நேரத்தில் இந்த நூலை முழுவதும் படித்து எனக்கு சில ஆலோசனைகளும் வழங்கி இந்நூலுக்கு அன்பு  உரையும் எழுதிக் கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரால் வர முடியவில்லை என்றாலும் மனம் முழுக்க இங்குதான் இருக்கும். நேரலையில் முழு நிகழ்வையும் பார்த்துக் கொண்டிருக்கும் என் கணவருக்கு முதல் நன்றி.  இன்னும் சொல்லப்போனால், ‘கண்டிப்பாக நீ இந்த நிகழ்ச்சிக்குப் போய் நல்ல படியாக நடத்திவிட்டு வா’ என்று என்னை வாழ்த்தி அனுப்பியதும் அவர்தான்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தங்களுடைய பல்வேறு பணிகளுக்கும் இடையே நேரம் ஒதுக்கி வந்திருக்கக்கூடிய துணை முதலமைச்சர், தமிழக தமிழக அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அனைத்து துறையையும் சார்ந்த பிரமுகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சொன்னதும் அரங்கத்தில் இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதி  உள்ளிட்ட அனைவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.