/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay1_0.jpg)
திண்டுக்கல் மாநகர தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளாவிற்கு இரண்டு இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ரவுண்டுரோடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் ஜி.வினோத். இவர் இளைய தளபதி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார். அழகியதமிழ்மகன் என்ற ரசிகர்மன்றத்தின் தலைவராக இருக்கும் விஜய் வினோத், ஒவ்வொரு மாதமும் விஜய் பிறந்த தேதியன்று பல்வேறு பகுதிக்குச் சென்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay flood.jpg)
தற்போது மாநகர தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் மாநகர தலைவராக உள்ளார். தற்போது கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வண்ணம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் ரூ இரண்டு இலட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, கைலி, துண்டு, நைட்டி, மற்றும் சிறுவர்களுக்கான பால்பவுடர்கள், பிஸ்கட் உட்பட நிவாரண பொருட்களை வேன்கள் மூலம் எடுத்துச்சென்று கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மற்றும் அதன் அருகில் உள்ள கச்சிகட்டி கிராமப்பகுதிகளுக்கு சென்று வழங்கினார். நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கேரளா மக்கள் தமிழக மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
Follow Us