சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின்செய்தியாளர்களைச் சந்தித்தார்
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளதா?என்ற கேள்விக்கு,
நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்னை சந்தித்துவிட்டு சென்றார். இன்று தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துசென்றுள்ளார். ஏற்கனவே வைகோ அவர்கள் நடத்திய மாநாட்டில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பங்கு கொண்டார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அடுத்த மாதம் நடக்கிற மாநாட்டிற்கு எனக்குஅழைப்பு வந்துள்ளது. எனவே எங்கள் கூட்டணியில் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு இதை பேசி பேசி எங்களுக்கு பெருமை தேடித் தந்த ஊடகங்களுக்கு நன்றி எனக் கூறினார்.