satyaraj

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’எனது 40 ஆண்டுகால திரையுலக சேவையை பாராட்டி நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும், வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கும் நன்றி.

Advertisment

எனது 40 ஆண்டுகால கலையுலக சேவையை பாராட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், கரசங்காலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு என்னை நேரில் வாழ்த்திய நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், மக்கள் தொடர்பாளர்கள், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாராட்டு விழாவை பிரமாண்டமாக நடத்திக்காட்டிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை.டி.முருகேசன்,Ex:MLA, அவர்களுக்கும், அனைத்து நிர்வாகிகளுக்கும், லட்சக்கணக்கில் திரண்டு மாபெரும் மாநாடாக மாற்றிய எனது ரசிக பெருமக்களுக்கும், மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

Advertisment

மேலும் தொலைக்காட்சி, தொலைபேசி, அலைபேசி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாகவும் எனக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த கட்சி தலைவர்களுக்கும், அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.’’