Advertisment

கலைஞருக்கு நெல்லையில் புகழஞ்சலி வணக்கம்! அரசியல் கட்சி தலைவர்கள் உருக்கம்!

v

மறைந்தும் மறையாத கலைஞருக்கு நெல்லையில் புகழஞ்சலி செலுத்திய 25 அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பாளர்களின் மேடையின் பின்னணியில் பட்ட இந்த வரிகள் பலரின் பார்வையை உற்று நோக்க வைத்தது.

Advertisment

சிறப்பான திறந்த வெளிமேடை என்றாலும் தி.மு.க.வின் மாவட்டப் பொறுப்பாளர்கள் எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பில் பக்காவாக அமைத்திருந்தார் பந்தல் மேடை இடைகால் மாரியப்பன். மேடை முகப்பில் கலைஞரின். இளமைப் பருவம், இடைப்பட்ட பருவம், தற்போதைய முதுமைப் பருவம் என மூன்று பருவங்களின் படங்கள் டைமிங்காக அலங்கரித்தது.

Advertisment

ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நிகழ்ச்சியில் பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலைஞரின் அரசியல் ஆளுமை பற்றி உன்னிப்பாக முன்வைத்ததில் ஆளுமை வெளிப்பட்டதோடு அதில் கலைஞரின் ராஜ கம்பீரமும் புலப்பட்டது. கரகரத்த குரலில் கலைஞரின் அடி வயிற்றிலிருந்து கிளம்பி வரும் அவரின் ராஜ முத்திரையான, என் உயிரினும் மேலான உடன் பிறப்பே என்ற ஜீவ வார்த்தைகளே சாமான்ய பொது மக்கள், தொண்டர்கள் என்று சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைத் திரள வைத்து விட்டது. மேடையின் கீழே, செயல் தலைவர் ஸ்டாலின் கனிமொழி உள்ளிட்டோர்.

p

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க மேடையிலிருந்த கலைஞரிடம், நான் பா.ம.க.விலிருந்த போது உங்களை விமர்சித்துப் பேசியவன் என்றேன். அதற்கு அவர், உன் இடத்தில் நான் இருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன் என்றார். அப்படிப்பட்டது அவரது ஆளுமை. பின்பு என்னை அழைத்து நீ வேல்முருகன் அல்ல தூள் முருகன் என்றார். கடற்கரையில் கலைஞருக்கு இடம் கொடுத்திருந்தால் வரலாற்றில் எடப்பாடி இடம் பெற்றிருப்பார். அந்த பாக்யம் அவருக்கு இல்லை என்றார் உச்சத் தொனியில்.

அண்ணா நூற்றாண்டு நூலகம், அமைத்து அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுகிற வகையிலும், பிள்ளைகள், தங்களின் வகுப்புப் புத்தககங்களைக் கொண்டு வந்து படிக்கும் படியானது உள்ளிட்ட இரண்டு தொகுப்புகளையும் அமைத்திருந்தார் கலைஞர். உட்காந்து, படிக்க, வசதியற்ற பிள்ளைகள் வெளிச்சத்தில் நாற்காலியில்மர்ந்து படிக்கட்டும் என்கிற கருணை உள்ளத்தில் அப்படி அமைத்திருந்தார் என்றார் சுப.வீரபாண்டியன்.

n

த.மா.க.வின் ஜி.கே. வாசன், டெல்லியைத் தமிழகம் உற்று நோக்கிக் கொண்டிருந்த காலத்தை மாற்றி, டெல்லியே தமிழகத்தை உற்றுப் பார்க்கிற அளவுக்கு நிலைமையை மாற்றியவர்கள் தலைவர் காமராஜர் அடுத்து கலைஞர். என் தந்தையோடு நடைபோடும், பண்போடும் பழகிய கலைஞர் வயது வித்தியாசம் பாராமல் என்னை அரவனைத்தார் என நினைவு கூர்ந்தார்.

உலகில் எவரும் இதயத்தை இரவலாகக் கேட்டதில்லை. எதையும் தாங்கும் இதயத்தை அண்ணாவிற்கான இரங்கற்பாவில். இரவில் கேட்ட தலைவன். அண்ணாவின் அருகில் அடக்கம் வைத்து அத்தனை சோதனையிலும் வெற்றிபெற வைத்தவர். தரம் கொண்ட நூலகத்தை ஏற்படுத்தி தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவான தலைவருக்கு அவர் பெயரால் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டி நன்றி காட்டியவர் கலைஞர் என்று உருகினார் திருமா.

இந்திய யூனியின் லீ்க்கின் காதர்மைதீன், தமிழனத்தின் தவப் புதல்வர். அவரின் ஆளுமை ஆயகலைகள் 64 லிலும் உள்ளது. அதில் தனித்துவமாக உள்ளவர். என்று முடித்தார்.

neduvasal

சி.பி.ஐ.யின் முத்தரசன். எந்தப் பின்னணியும், உதவியுமின்றி வளர்ச்சியற்ற பின் தங்கிய கிராமத்தில் பிறந்த எளியவர் உலகப் புகழைப் பெற்றவர். மிகப் பெரிய பொதுக் கூட்டம் தலைவர்கள், அமைச்சர்களிருக்கிறார்கள்.

அங்கே கொடி ஏற்ற வந்த கலைஞர், கூட்டத்தின் ஒரத்தில் நின்ற ஒரு தொண்டனை அழைத்துக் கொடி ஏற்ற வைத்து. அடி மட்டத் தொண்டனையும் மதித்த கண்ணியத் தலைவர். ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள். தேரோட்டம் எதற்கு ராஜா என்று கேட்டவர் கலைஞர். நீ 93 வருடங்கள் ஒயாமல் உழைத்தாய். எனக்கே வேதனையா யிருக்கு போதும். வந்து விடு என்று இயற்கை மண்டியிட்டு மன்றாடி, மடிப்பிச்சை கேட்கிறேன் என்று போராடி அவரை அழைத்துச் சென்று விட்டது. என்றார் அழுத்தமாக.

n

சி.பி.எம்.மின். பாலகிருஷ்ணன். ஏழை எளிய, பள்ளிப் படிப்பையும் முடிக்க இயலாத வழியில் வந்தவர் தான். இன்றைக்கு பல பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர். அதற்கு அவரின் உழைப்பு, உழைப்பு என்ற கொள்கையே. கடலுக்கு அலை எப்படி ஆதாரமோ, அதைப் போல அவருக்கு உழைப்பு ஆதாரம். தமிழ்நாட்டில் எலியும் பூனையுமாக இருந்த தலைவர்கள் இணைந்து அஞ்சலி செலுத்திகிறார்கள் என்றால் இது தான் கலைஞரின் ஆளுமை, என்றவர்,

1989 ஜூன் 15 அவசர நிலையை உள்ளே அனுமதிக்க மாட்டேன். தன் ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தே கம்பீரமாக முழக்கமிட்டு ஆட்சியைப் பறிகொடுத்து ஜனநயாகத்தைக் காப்பாற்றிய தலைவர் என்றார் கரம் உயர.

ம.தி.மு.க.வின் பொது செ.வான வைகோ வோ, உணர்ச்சியின் சிகரத்திற்கே போய் விட்டார்.

அண்ணாவும், கலைஞரும், கண்ட தி.மு.க.வை 50 ஆண்டு காலம் கட்டிக் காப்பாற்றிய தலைவர் கலைஞரைத் தவிர வேறு எருமில்லை. வெட்டுப் பாறையில் வெண்கல மணிகள் உருண்டு வருகிற மாதிரி, வந்த டாக்டர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளே என்றதும், கூட்டத்தில் உணர்ச்சி ஆரவாரம், தூங்காமை, அஞ்சாமை, இலக்கணத்தின் ஆளுமை இலக்கணம் தலைவர் கலைஞர், 23 ஆண்டுகள் எனக்கு முகவரி கொடுத்தவர் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த பேறு. 23 ஆண்கள் கலைஞருக்குப் பக்க பலமாக இருந்தேன். இனிமேல் அவர் ஸ்டாலினுக்கு என் இறுதி மூச்சு வரை பாதுகாப்பாக இருப்பேன். அண்ணா, நீங்கள் மறைந்தும், மண்ணில் நீங்கள் மறையவில்லை. லட்சக்கணக்கான இளைஞர்களை நீங்கள் ஈர்த்தது வரலாறு. கோவில் கூடாது அல்ல. அது கொள்ளையர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்று சொன்ன தலைவன். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தைரியமாக சட்டசபையில் பிரகடனப்படுத்திய அஞ்சாத கலைஞர். தாமிரபரணியே உங்களை வாழ்த்துகிறது என்றார் ஒங்கிய குரலில்.

n

பா.ஜ.க.வின் தமிழசை, குறளோவியம், பராசக்தி எழுதிய தலைவர். குரலெழுப்பிய தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியவர். நடக்க முடியாததையும் நடத்திக் காண்பித்தவர் டாக்டர் கலைஞர். தமிழ் என்ற அவரின் மொழியின் ஆளுமை தான், அவரை அரசியலில் ஆளுமை ஆக்கியது. ஐயா வீரமணி பக்கத்தில் என்னை அமர வைத்தவர் கலைஞர். அவரின் உடலோடு போர்த்தப்பட்ட தேசியக் கொடி தேர்ந்தெடுக்கப்பட்டவரால் ஏற்றப்பட வேண்டும், என்ற உரிமையைப் பெற்றவர்.

நான் வருவேனா மாட்டேனா என வாதம் கிளம்பியது. ஆனால் முத்தமிழ் இருக்குமிடத்தில் இந்த இசைத் தமிழக்கும் இடம் கொடுத்தவர் கலைஞர். உங்களுக்கு முதுகு வலி எப்படி வந்தது. என்று கேட்டார்கள். அதற்கு தலைவர் சொன்னார், சுகர், பி.பி.யை நான் கண்ட்ரோல் பண்ணிட்டேன். ஆனா பலர் என்னை முதுகில் குத்துகிறார்கள். அதானல் வந்த வலி இது என்றார். இந்தியாவின் நன்மைக்காக வாஜ்பாயோடு சேர்ந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தவர் கலைஞர். அவரின் உழைப்பு ஆளுமை, கட்சிக்கும் அப்பாற்பட்டு மதிப்பிற்குரிய ஆளுமைத் தலைமைக்கு பா.ஜ.க.அஞ்சலி செலுத்துகிறது. உதய சூரியன் வெற்றிச் சூரியன். அது தொண்டர்களின் இதய சூரியன் மறையாது என்ற தமிழிசையின் முழக்கப் பேச்சு. கனத்த ஆரவாரத்தைக் கிளப்பியது.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரோ, தன் பள்ளிப் பருவத்தில் கலைஞர், பள்ளியில் பேச வந்த போது அவர் பக்கத்தில் நின்றதை நினைவு கூர்ந்தவர், 1977ல் கலைஞருக்கு ரத்த வாந்தி என்று பேப்பரில் செய்தி வந்ததைப் பார்த்து விட்டு பதறிப் போய் மருத்துவமனைக்கு நண்பர்களுடன் ஒடோடிப் போய் அவரைப் பக்கத்தில் நின்று பார்த்தேன். 78ல் என் கல்யாணம் எம்.ஜி.ஆர். தலைமையில் என்று சொல்லி கலைஞரை அழைச்சப்ப, அதனால் என்னய்யா அவர் வரட்டும் நா, ஒரு ஓரமா வந்திட்டுப் போறேம்யான்னு சொன்ன பெருந்தன்மை கொண்டவர். 1984ல் தி.மு.க.விற்குச் சோதனையான கட்டம். ராஜீவ் கொல்லப்பட்ட நேரம். போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோற்றார்கள். பின்னால அதையும் ராஜினாமா பண்ணிட்டார். அரசியல் ஞானி. தோல்வியே காணாதவர். மக்களுக்கு நல்ல காரியம் செயததைப் போல் கட்சிக்கும் நல்ல காரியம் செய்தவர். இப்படிப்பட்ட தலைவனை எத்தனை ஆயிரம் ஆண்டுகட்குப் பிறகு பார்க்கப் போகிறோமோ. என்று கண்களைக் கசிய வைத்து விட்டார்.

முடிவில் பேசிய ஆசிரியர் வீரமணி. ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும், ஆளுமை. கலைஞருக்கு எப்படிப்பட்ட வாழ்த்து. கலைஞரின் அந்த ஆளுமை ஈரோட்டுக் கொள்ளிடத்திலிருந்து வந்தது. திராவிடத்திற்கு நீதிக் கட்சி என்ற வரலாறு உண்டு, அந்த இடம் நிரப்பப்பட்டு விட்டது. ராஜகோபலாச்சாரியார், பெரியாருக்கு வாழ்த்து எழுதினார். நானும் பெரியாரும் அன்பான எதிரிகள். அவர் நீடு வாழ்க என்று எழுதினார். ராஜாஜி மறைந்த போது, அஞ்சலியில் குடியரசுத் தலைவர், பெரியாருக்கு சக்கர நாற்காலி கொடுத்து உதவினார் அது தான் பண்பாடு. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற திராவிட இயக்கத்தின் அரசியல் பண்பாடு என்றவர், தமிழசை சௌந்தர ராஜனைச் சுட்டிக்காட்டி, நீங்கள் சூரியன் மறையவில்லை என்று சொன்னீர்கள். அதை எங்கும் சொல்லுங்கள். சூரியனும் மறையாது நட்சத்திரமும் மறையாது. அது காவியாகாது என்று திராவிடத்தின் மத சார்பின்மையைப் பிரகடனப்படுத்திய போது கூட்டத்தில் பெருத்த ஆரவாரம்.

சாதி ஒழிய வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் அது தான் திராவிட இயக்கம். அதன் கலைஞர், ஒரு பாடம். அவரைப் படமாகப் பார்க்காதீர்கள். அவர் மெழுகு வர்த்தி. தன்னை எரித்துந் கொண்டு பிறருக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும். நான்காவது அத்தியாயம் தொடங்கட்டும். நம் லட்சித் தமிழன் வரட்டும் என்று கம்பீரமாய் முடித்தார். ஆசிரியர் வீரமணி.

கலைஞரின் அதே அரசியல் ராஜகம்பீரம் அனைத்துத் தலைவர்களின் உரையிலும் எதிரொலித்தது.

velmurugan Thirumavalavan vaiko kalaignar nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe