தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நிகழ்த்திட தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத் துறையும் வலியுறுத்தி மதுரை வண்டியூர் வீரராகவப்பெருமாள் மந்தையில் தமிழ் உணர்வாளர்கள், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர், அரசயோகி கருவூறார் அவர்களின் அன்புசித்தர் அடியார்கள் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.