வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (05.02.2020) நடைபெறவிருக்கிறது. குடமுழுக்கிற்காக கோவிலின் சுற்றுப்புறத்தில் மிக பிரமாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஓவிய வேலைபாடுகள் கொண்ட இந்த யாக சாலையில் தேவர்கள், ராகு, கேது, சனீஸ்வரன் உள்ளிட்ட கிரகங்கள், பிற கடவுளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்பாக சைவ சமய குரவர்களான திருஞானசம்மந்தர், அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரின் சிலைகளும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.
படங்கள் : மகேஷ் குமார்