Advertisment

தஞ்சை குடமுழுக்கு தமிழில் நடத்த துணை முதல்வரிடம் இயக்குனர் கெளதமன் மனு!

தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டி இயக்குனர் கௌதமன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Advertisment

இதுத்தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் இயக்குனர் கௌதமன், "தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழர்களும் ஒரு மித்த கருத்துடன் கோரி வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு செய்யலாம் என்று அறிவித்திருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisment

thanjavur temple festival gowthaman meet with deputy cm for today

மேலும் இந்து அறநிலையத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட பதிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. எனவே சம்மந்தமே இல்லாத சமஸ்கிருதம் எங்களுக்கு தேவையில்லை எனவும் கூறிய அவர் இதுத்தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

குறிப்பாக வருகின்ற 5- ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்வில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் போது ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்ப்பை தெரிவிப்போம்" என்றார்.

deputy cm director gowthaman o paneer selvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe