Advertisment

தஞ்சையில் ஒருநாள் மட்டுமே சதய விழா!

thanjavur temple festival district collector announced

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா ஒரு நாள் மட்டுமே நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,035- வது சதய விழா வரும்அக்டோபர் 26- ஆம் தேதி மட்டும் நடைபெறும். ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்தல், பெருவுடையாருக்கு அபிஷேகம், இரவு சுவாமி வீதி உலா மட்டும் நடக்கிறது. பட்டிமன்றம், பாட்டுமன்றம், கலை நிகழ்ச்சிகள், ராஜராஜன் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்டவர்கள் சதய விழாவில் பங்கேற்க அனுமதியில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வழக்கமாக இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் சதய விழா கரோனா காரணமாக ஒருநாள் மட்டுமே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

District Collector Festival Rajaraja Cholan Thanjai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe