தஞ்சை ஆயுதப்படையில் பணி செய்யும் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த பெண் போலீசுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வெளியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் அவர் குடியிருந்த காவலர் குடியிருப்பு பகுதி மூடப்பட்டதுடன் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு, அதன்பிறகு நடந்த ரோல் காலில் அவர் கலந்து கொண்டுள்ளார். அதனால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் அச்சத்தில் உள்ளனர். அதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்வதுடன் அவர்களுக்கும்விடுமுறை கொடுத்து தனிமையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.