thanjavur orathanadu veterinary college trainee doctor incident 

Advertisment

சென்னை மதுரவாயல் பகுதியைச்சேர்ந்தவர் பத்மநாதன்.இவரதுமகன் வசந்த் சூர்யா (வயது 23). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில்படித்து வரும் நிலையில், தஞ்சாவூர் அருகில் உள்ள ரெட்டிபாளையம் கால்நடை மருத்துவமனையில்பயிற்சிமருத்துவராகவும்பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வசந்த் சூர்யாவும்,அவருடன் அதே கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்களானசிவராஜ் மற்றும் சதிஷ்குமாரும்மருத்துவமனையில் தங்கி உள்ளனர். சிவராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரும் மருத்துவமனையில் உள்ள அறையில் உறங்கி உள்ளனர். வசந்த் சூர்யா மருத்துவமனையில் வெளியேஉள்ள முகப்பு அறையில் உறங்கி உள்ளார்.

இந்நிலையில், வசந்த் சூர்யா நேற்று காலை மருத்துவமனையின் வெளிப்புறத்தில் உள்ள கொட்டகை ஒன்றில் தூக்கில் பிணமாகத்தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்குதகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்துசம்பவ இடத்திற்குவந்த போலீசார்வழக்குப்பதிவு செய்து வசந்த் சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தஞ்சைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்த சூர்யா படுத்திருந்த இடத்தில்மதுபாட்டில் ஒன்று இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வசந்த சூர்யா பயன்படுத்திய தொலைபேசியை கைப்பற்றியும் விசாரணை செய்து வருகின்றனர். வசந்த் சூர்யா தற்கொலை செய்து கொண்டாராஅல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.