Advertisment

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராத விதமாக, தேர், மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27/04/2022) நேரில் சென்று, உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, நிவாரண உதவி வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து, களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவின்போது விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.