thanjavur husband and wife incident

தஞ்சாவூர் மாவட்டம் இன்னம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 85). கொத்தனாராக வேலை செய்து வரும் இவருக்கு சரோஜா (வயது 75) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர். கலியபெருமாள் கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்துவிட்டார்.

Advertisment

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கணவரின் சடலத்தின் அருகிலேயேசெய்வது அறியாமல் அழுது கொண்டிருந்த சரோஜா மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சரோஜாவை மயக்க நிலையில் இருந்து தெளிய வைக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர் மயக்க நிலையில் இருந்து தெளியவில்லை.சற்று நேரத்தில் சரோஜாவும் இறந்துவிட்டதை அறிந்து அங்கிருந்தவர்கள் கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து இருவரையும் ஒரே இடத்தில்வைத்து அடக்கம் செய்தனர்.

Advertisment

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.