இரு குழந்தைகளுடன் தாய் ஆற்றில் குதித்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் சேப்பனாவாரி இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்வயது நாற்பது,இவரது மனைவி செல்வி. இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்வி தனது குழந்தைகள் ஸ்வேதா, கோகுல் செழியனுடன் சேப்பனாவாரி பகுதியில் உள்ள பாலத்திற்கு வந்தவர், கல்லணைகால்வாயில் இன்று காலை குதித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பதறி துடித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கூறினர்.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அந்த இடத்திற்க்கு சென்று ஆற்றில் குதித்து மூன்று பேரையும் தேடினர். இதில் செல்வி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள அவசர பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தைகளை தீயணைப்பு துறை வீரர்கள் உயிரை பணயம் வைத்து தேடி வருகின்றனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/thanjavur_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/thanjavur_23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/thanjavur_22.jpg)