thanjavur district women incident police arrested four person

Advertisment

தஞ்சை அருகே இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள தோழகிரிப்பட்டி பகுதியில் 22 வயதான இளம்பெண் ஒருவர் வேலை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, காட்டிற்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று.

இது குறித்து தகவலறிந்த வல்லம் காவல்துறையினர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக, கொடி அரசன், சுகுமாறன், கண்ணன், தமிழரசன் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி. பிரிவு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினர், காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.