தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்மநபர்கள். திருவள்ளுவர் சிலையில் கண்ணில் சாணத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளன. திருவள்ளுவர் சிலையை அவமதித்துச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்பதுகுறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீறு அணிவித்து படம் வெளியாகி சர்ச்சை ஏற்பட்ட நிலையில், சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள், மாணவர்கள் என அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.