தஞ்சையில் மீண்டும் துயரம் - மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

thanjavur district power incident childrens

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கல்யாண ஓடை மறவக்காடு பகுதியில் சகோதரர்கள் தினேஷ் (வயது 12), கௌதம் (வயது 10) ஆகிய இருவரும், வாய்க்காலில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியைத் தவறுதலாக மிதித்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் கூறுகின்றன.

ஏற்கனவேஇந்த மாவட்டத்தில், வரகூரில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பயணிகள் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே, பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 25,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காயமடைந்து சிகிச்சைப் பெறும் நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

incident police Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe