நீர் வழித்தடங்கள் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்

thanjavur chief minister மக் stalin water resource inspection 

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடிக்காக வருகிற 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம்தேதி முதல் தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எம்.பி. திருநாவுக்கரசு, ஐ.ஜி கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் சத்யபிரியா, மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். மேலும் விமான நிலையத்தில் முதல்வரை காண காத்திருந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.

thanjavur chief minister மக் stalin water resource inspection 

இந்த நிலையில், தஞ்சையை அடுத்த ஆலக்குடியில் உள்ள முதலைமுத்துவாரியில் நீர் வழித்தடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப்பார்வையிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகிறார். இங்கு ரூ. 20 லட்சம் செலவில் சுமார் 3.5 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. ஆய்வின் போது வரைபடம், புகைப்படம் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

thanjavur chief minister மக் stalin water resource inspection 

முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனி மாணிக்கம், ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் உள்ளனர். அதனைத் தொடர்ந்து பூதலூர் வட்டம்விண்ணமங்கலம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளார். முதலமைச்சர் தஞ்சை வருகையையொட்டி 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

inspection Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe