Skip to main content

பஸ் நிறுவன மோசடி வழக்கு; 3 பேர் கைது

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

thanjavur bus transport incident action taken by trichy police

 

பஸ் நிறுவன மோசடி வழக்கில் அலுவலக உதவியாளர்கள் 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

தஞ்சை மாவட்டம் ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாகக் கூறியுள்ளார். இதை நம்பி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

 

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 6,131 பேரிடம் சுமார் 410 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

 

இந்நிலையில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அத்துடன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். இதில் கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்து பணத்தை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற அலுவலக உதவியாளரான அய்யம்பேட்டையைச் சேர்ந்த முகமது சுபாந்தீரியோ (56), முகமது ரபீக் (46), முகமது சாதிக்(57) ஆகிய 3 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.