தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்புதாசன் (வயது 30) விவசாயி. இவருக்கும் வேதாரண்யம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் - கல்யாணசுந்தரி தம்பதிகளின் மகள் கார்த்திகாவுக்கும் (வயது 25) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவதர்ஷினி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.

Advertisment

h

இந்நிலையில் அன்புதாசனுக்கும், கார்த்திகாவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகா, சனிக்கிழமை இரவு கணவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Advertisment

அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடு‌த்து கார்த்திகாயின் உடல், உடற்கூறாய்விற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இறந்த கார்த்திகாவின் தாய் கல்யாணசுந்தரி, தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.