Advertisment

தமிழ், சமஸ்கிருதம்... இரு மொழிகளிலும் குடமுழுக்கு... அறநிலையத்துறை பதில்!

தஞ்சைபெரியக்கோவில்குடமுழுக்குதமிழ் மற்றும் சமஸ்கிருதம் எனமொழிகளிலும் நடத்தப்படும் எனஇந்து சமய அறநிலையதுறை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

Advertisment

தஞ்சையில் உள்ள பெரியக்கோவிலுக்கு நடத்தப்பட இருக்கும்குடமுழுக்கு விழாவைதமிழில்நடத்த வேண்டும் எனபல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள்வலியுறுத்தப்பட்டன. மேலும் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

thanjai periyaovil kudamuluku...

குறிப்பாகநாம் தமிழர் கட்சியின்மாநிலஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் தரப்பில்உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்றே இது தொடர்பான வழக்குகளில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்இன்று இந்து சமய அறநிலையத்துறைதரப்பில் குடமுழுக்கு விழாவைதமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஎனபதிலளிக்கப்பட்டது.

இதனை பிரமாணபத்திரமாக தாக்கல்செய்ய அறநிலையத்துறைக்குஉத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தது.

tamil nam tamilar thanjai periyakovil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe