Advertisment

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு- இந்து சமய அறநிலையத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில்மனு!

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன்,நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், தஞ்சை பெரியகோவில் உரிமை உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

thanjai district temple reforming festival high court madurai branch

அதில்," தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மிக பிரசித்தி பெற்ற சைவ வழிபாட்டு தலம். யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய தொல்லியல்துறையின் அனுமதியுடன் தான் தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த உள்ளோம். தஞ்சாவூர் பெரிய கோயில் தேவஸ்தானம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தடை கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.

இதில் கோவில் தரப்பில், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் குடமுழுக்கு மற்றும் முக்கிய பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டன. அப்போது எதிர்தரப்பிற்காக ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

thanjai district temple reforming festival high court madurai branch

ஆனால் அரசின் வேத ஆகம பாடசாலைகளில் அனைத்து ஜாதியை சேர்ந்த அர்ச்சகர்களும் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்கள் தான். இவர்களை வைத்து குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கோவிலில் தீ விபத்து போன்ற விஷயங்களை தவிர்ப்பதற்காக யாக குண்டங்களை கோவிலுக்கு வெளிப் பகுதியில் அமைத்துள்ளோம் என அறநிலையத்துறை சார்பில் தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை இன்று (29.01.2020) ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

madurai high court temple temple reforming Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe