mk surappa 450.jpg

Advertisment

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த எம்.கே.சூரப்பா என்பவரை கவர்னர் நியமத்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம்.

Advertisment

காவேரி உரிமைப் போரில் கர்நாடக மாநிலம் தமிழகத்தை வஞ்சிப்பதாக, தமிழர்கள் கொந்தளிக்கும் நிலையில், கர்நாடகவை சேர்ந்த ஒருவரை தமிழகத்தில் புகழ்பெற்ற பல்லகலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். இது தமிழகளின் உணர்வுகளை சீண்டும் செயலாகும்.

ஏற்கனவே தமிழ்நாடு இயல் இசை பல்கலைக் கழகத்திற்கு கேரளாவை சேர்ந்தவரும், அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஆந்திராவை சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அறிவும், திறனும் மிக்கவர்கள் யாரும் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதை ஏற்க முடியாது.

Advertisment

உடனடியாக இந்த நியமனத்தை ரத்து செய்து, தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கவர்னரை கேட்டுக் கொள்கிறோம்.தமிழ்நாட்டை காவி மயமாக்கும் இது போன்ற நடவடிக்கைகளைகைவிடுமாறு கவர்னரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.