Thangathamilselvan presented a gold ring to children born on the kalaignar birthday

முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் ஆங்காங்கே திமுக கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதுடன், மட்டுமல்லாமல் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

Advertisment

தேனி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன், முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நேற்று பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கும் போடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள போடி அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் என மொத்தம் பதிமூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அந்தந்த தாய்மார்களிடம் தங்க தமிழ்செல்வன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவருடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், முன்னாள் நகரச் செயலாளர் செல்லப்பாண்டி உள்பட கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Advertisment