சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி திமுக, டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து முடிக்கக் கோரி தங்கதமிழ்செல்வன் தரப்பில் வழக்கறிஞர் அமீத் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்கிரி முன்பு முறையிட்டார். ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனே முடிக்க முடியாது என்று தெரிவித்தது. ஆனால், விரைவில் முடிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)