''நான் திமுகவுக்கு போவதாக சொல்வது வதந்தி'' – மறுக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஜனவரி 30ந்தேதி அமமுக நிர்வாகிகளிடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்கு வருகை தந்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியான தங்க.தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

thangatamilselvan interview

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர், நான் திமுகவுக்கு போவதாக வரும் தகவல் பொய்யானவை. என் தந்தை திமுகவில் இருந்தார். கலைஞர் – எம்.ஜி.ஆர் மோதல் வந்தபோது, ஒரு நடிகரின் பின்னால் போகக்கூடாது என பேசியபோது, என் தந்தை எம்.ஜி.ஆர் பின்னால் நின்றார். 4 முறை ஒன்றிய செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக உடைந்தபோது, ஜெயலலிதா பின்னால் செல்லவில்லை. அப்படிப்பட்ட நான் இப்போது காலத்தின் கோலத்தால் சின்னம்மா பின்னால் நிற்கிறேன், இரட்டை இலைக்காக வழக்கு தொடுத்துள்ளார் எங்கள் துணை பொதுச்செயலாளர், அதில் வெற்றி பெற்று இரட்டை இலையை பெறுவோம், என் சின்னம் என்றும் இரட்டை இலை தான் என்றார்.

தேர்தல் வந்தால் எல்லா கட்சியும் பிற கட்சியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும், கூட்டணி அமைப்பதற்கான இறுதி நாளான்னு வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். அதனால் இப்போது யார், எந்த கூட்டணி என்று சொல்ல முடியாது.

திமுக தலைவர் நடத்தும் கிராமசபா கூட்டம் என்பது, அவர் கட்சியின் சார்பில் நடத்துகிறார், அது அவர்கள் பிரச்சனை. நான் டிவியில் பார்த்தவரை அந்த கூட்டம் இயல்பாக நடக்காமல் செயற்கை தனமாக உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜேக்டோ – ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி 9 கோரிக்கைகள் வைக்கிறார்களா 2வது நிறைவேற்ற வேண்டும், ஆசிரியர்கள், அதிகாரிகள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள், அவர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள். திமுக, கம்யூனிஸ்ட், அமமுக தான் போராட்டத்தை தூண்டிவிடுகிறார்கள் எனச்சொல்வது சரியல்ல. போராட்டத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் சுயஅறிவு உள்ளது, அவர்கள் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள்.

அமைச்சரவையில் ஊழல் நடக்கிறது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் எனக்கேட்கிறிர்கள், உள்ளாட்சி துறை அமைச்சர் குடும்பம் தான் உள்ளாட்சிகளுக்கு அனுப்பப்படும் பிளீச்சிங் பவுடர் வாங்கி தருகிறது. அதில் பெரியளவில் ஊழல் நடந்து ள்ளது என்றார்.

தங்க தமிழ்ச்செல்வனின் பதில்கள் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசைக்கூட குத்துகிறது. ஆனால் திமுக தலைவர் பற்றிய கேள்விக்குயெல்லாம் சாப்டாகவே நழுவும் மீனாகவே பதில் தந்தார். இது அங்குயிருந்த அமமுகவினரையே குழப்பத்தில் ஆழ்த்தியது.

ammk thanga tamilselvan mla
இதையும் படியுங்கள்
Subscribe