ADVERTISEMENT

குக்கர் சின்னம் கொடுத்து பாரு.. அதிமுக டெபாசிட்கூட வாங்காது! -தங்கதமிழ்செல்வன் பேட்டி!!

09:02 AM Feb 10, 2019 | sakthivel.m

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு, கிழக்கு மற்றும்திண்டுக்கல் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.பி நல்லசாமி தலைமை தாங்கினார். இந்த நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு கழக கொள்கை பரப்புச்செயளாலரும், தென்மண்டல பொறுப்பாளருமான தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றகழக தொண்டர்களும் நிர்வாகிகளும் தீவிரமாக களப்பணியாற்றி கழத வேட்பாளரை வெற்றிபெற செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.

ADVERTISEMENT

அதன் பின்னர் பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வனோ...

வரக்கூடிய நாடாளு மன்றத் தேர்தலுக்கு மே மாதம் வரை நேரம் இருக்கு வேட்புமனு கடைசி தேதி என்றைக்கோ அன்றுவரை கூட்டணி பேசலாம். கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் எதுவுமே இறுதி செய்யப்படவில்லை. எல்லா கட்சிகளும் எல்லாத் தரப்பிலும் பேசுகிறார்கள். அந்தந்த கட்சிக்கு யார் கூட கூட்டணி சேர்ந்தால் வெற்றி பெற முடியும் அப்படி ஒரு நிலை இருக்கிறது. இப்ப பேசிக்கிட்டு இருக்கிற கூட்டணி நிரந்தரமான கூட்டணி இல்லை. கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. திமுக கிராமசபை கூட்டம் நடத்துகிறார்கள் பொதுமக்கள் கூட்டினால் தான் கிராமசபை கூட்டம் திமுகவினர் புரிந்து கொள்ளாமல் நடத்துகிறார்கள். அது தேர்தலில் வெளிப்படும். லெட்டர் பேடு கட்சிக்கு கண்டு பயந்து ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு குக்கர் சின்னம் கொடுக்கக்கூடாது என்று ஓடுகிறீர்கள்.

உண்மையிலேயே உங்களுக்கு தைரியம் தெம்பு இருந்தால் குக்கர் சின்னத்தை கொடுத்து தேர்தலை சந்தித்து பாரு அதிமுக டெபாசிட் வாங்குதா என்று பார்ப்போம். இல்ல ஜெயக்குமார் டெபாசிட் வாங்குகிறாரா என்று பார்ப்போம். கூட்டணி வந்தால் நல்லது வரவில்லை என்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து நின்று மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.

இக் கூட்டத்தில் கழக அமைப்புச்செயளாளர் குமாரசாமி, திண்டுக்கல் நகர செயலாளர் ராமுத்தேவர்,மேற்கு மாவட்ட கழக செயளாலர் நல்லசாமி, கிழக்கு மாவட்ட செயளாலர் தங்கதுரை, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT