Advertisment

அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாய்க்கொழுப்பு அதிகம்! விளாசிய தங்கத்தமிழ்ச்செல்வன்!!

டிடிவி ஆதரவாளரான கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அப்பொழுது ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி கூடியவிரைவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரை தி.மு.க.வுக்கு அழைத்து வருகிறேன் என வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

Advertisment

thangatamilselvan about  jayakumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இது சம்மந்தமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், டிடிவி ஆதரவாளருமான தங்கத்தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது...

Advertisment

செந்தில்பாலாஜி இங்கிருந்து போனதுனால அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அவர் தொகுதியில் உள்ள ஆதரவாளர்களுடன் தான் தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அதுலயும் பலரை காசு கொடுத்து கூட்டிட்டு போய்இருக்கிறாரே தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பெயர் சொல்லும் அளவிற்கு யாரும் போகவில்லை. அதுபோல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொறுப்பாளர்களும் செந்தில் பாலாஜி பின்னாடி எல்லாம் போகமாட்டார்கள். தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் டிடிவி பக்கம்தான் இருப்பார்களே தவிர இனி யாரும் தி.மு.க.வுக்கு போகமாட்டார்கள் என்றவரிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது செந்தில்பாலாஜியை தொடர்ந்து கூடிய விரைவில் தினகரனும் தி.மு.க.வில் சேரப் போகிறார் என்று பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, அம்மா மறைந்த பின்பு அ.தி.மு.க.வில் அமைச்சர்களுக்கு எல்லாம் துளிர்விட்டு போய்விட்டது. அங்கங்கே வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். அதுபோலதான் இந்த ஜெயக்குமாரும் எங்க துணைப் பொதுச்செயலாளரை தி.மு.கவுக்கு போகப்போகிறார் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த ஜெயக்குமாருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் அம்மா இருந்தப்ப ஓரங்கட்டி வைத்திருந்த ஜெயக்குமார் இப்ப பதவிக்கு வந்தபின் ஓவராக பேசி வருகிறார். இந்த ஜெயக்குமார் தொகுதியான ராயப்பேட்டை தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டாலும் ஜெயக்குமார் டெபாசிட் வாங்கமாட்டார். அது அவருக்கே தெரியும் அப்படியிருந்தும் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். இனிமேலாவது எங்க துணைப் பொதுச் செயலாளர் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்களும் ஜெயக்குமாரின் பல ரகசிய தகவல்களை அதிரடியாக வெளியிடுவோம் என்று கூறினார்!

jayakumar ammk Thangatamilselvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe