Skip to main content

என் மீது வழக்கு தொடர்ந்த வக்கீல் பெண்மணியை பாராட்டுகிறேன்: அதே நேரத்தில் அவருக்கு ஒரு கேள்வி: தங்க தமிழ்செல்வன் பேட்டி

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
Thangatamilselvan



அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி டி–பிளாக்கில் உள்ள ஏ.பி.சி. திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தங்க தமிழ்செல்வன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

 

 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து என்னுடைய உணர்வை வெளிப்படுத்தினேன். ஸ்ரீமதி என்பவர் என் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்மணியை பாராட்டுகிறேன். நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குடிமகன் என்ற முறையில் அவர் வழக்கை தொடர்ந்து இருக்கிறார். 
 

அவரிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் 4 பேர் நேரடியாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த பேட்டியை அடிப்படையாக வைத்து அந்த 4 பேர் மீதும் இந்த பெண்மணி ஏன் வழக்கு தொடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் வக்கீல் பதவி போய்விடும் என்ற பயமா, நான் சாதாரணமானவன் என்பதால் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாரா, இந்த கேள்விகளை அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

 

 

 

தகுதி நீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணாவை நியமித்துள்ளனர். அவரை சந்தித்து தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மனு கொடுக்க இருக்கிறேன். அதை அவர் ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன் என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்