Thangamani in the test again ... Raid in any places ...!

Advertisment

கடந்த 15.12.2021 அன்று முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் இன்று (20.12.2021) சோதனை நடத்தப்பட்டுவருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்கள், சேலம் மாவட்டத்தில் ஒரு இடம் என மொத்தம் 14 இடங்களில் இன்று சோதனை நடைபெற்றுவருகிறது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திலுள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் பி.எஸ்.கே. பெரியசாமி, தீபன் சக்கரவர்த்தி, சண்முகம் ஆகியோரின் வீடுகளில் சோதனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அசோக் குமார் வீடு,சரண்யா நூற்பாலை, எஸ்.எம்.என். கோழிப்பண்ணை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. நாமக்கல்லில் பி.எம். மோகன், பி.எஸ்.கே. கார்டன்ஸ், ஹைலைன் சீனிவாசா நிறுவனத்தில் சோதனை நடைபெற்றுவருகிறது. ஈரோடு மாவட்டத்தில் செந்தில்நாதன்,கோபாலகிருஷ்ணன்,பாலசந்திரன் வீடுகளில் சோதனை நடக்கிறது. சேலம் திருவாக்கவுண்டனூரில் தங்கமணியின் நண்பரான குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது.