Advertisment

இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க பி.ஜே.பி.யும் துணைபோனது!  தங்கதமிழ்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு!

thanga tamilselvan

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அம்மா முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளரான காசிராஜன் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வருகிறார். அவரை டிடிவியின் தீவிர ஆதரவாளராரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Advertisment

அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன்,

பொதுவாகவே பெண்கள் கோவில்லுக்கு போக வேண்டும் என்றால் சுத்தமாக இருந்தால் தான் போய் வருவார்கள். அது போல் ஐய்யப்பன் கோவில்லுக்கும் சுத்தமாக இருந்து நல்ல முறையில் போய்வருவார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட்டும் ஒரு நல்ல தீர்ப்பு தான் வழங்கி இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன்.

Advertisment

இந்த மாவட்டத்தில் துணை முதல்வரான ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள் என ஏற்கனவே உங்களிடம் பேட்டி கொடுத்து இருந்தேன். அதன் அடிப்படையில் தான் மாவட்ட கலெக்டரும் அதிரடி நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுத்து இருக்கிறார். அதற்க்காக மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தேர்தல் என்றுலே இந்த இபிஎஸ் ஒபிஎஸ் அரசு பயந்து வருகிறது. அதனால்தான் உள்ளாட்சி தேர்தல் உள்பட எந்த தேர்தலையும் நடத்த ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இடைத்தேர்தலில் நாங்க தான் வெற்றி பெறுவோம். அதற்காக தான் அண்ணன் டிடிவியும் திருப்பரங்குன்றம் கூட்டத்தில் பொதுக்கூட்டம் போட்டு நலத் திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார்.

ஒரு முக்கியமான குற்றச்சாட்டை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்த போது இலங்கையில் வீரவணக்கம் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு பேசும்போது, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இலங்கைக்கு இராணுவ தளவாடங்களை வழங்கியதுதால் தான் விடுதலை புலிகளை அழித்து இருப்பதாக கூறி அங்குள்ள பதிவேட்டிலேயும் பதிவு செய்து இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது இந்த அரசு திமுகவையும், காங்கிரஸ்சையும் எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்களே, ஏன் அதே விடுதலை புலிகளை அழிக்க துணை போன பிஜேபியை மட்டும் எதிர்த்து கூட்டம் நடத்த வில்லை. எடப்பாடிக்கு பிஜேபி மேல் பயம் இருக்கிறது. கூடிய விரவில் 18 எம்.எல்.ஏ.களின் தீர்ப்பு வர இருக்கிறது. அதன் மூலம் இந்த ஆட்சிக்கு விடிவு காலம் பிறக்கும் என்று கூறினார்.

thanga tamilselvan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe