18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் மீதான தீர்ப்பு வர காலதாமதம் ஆவதால், இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைபொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

நான் ஏற்கனவே கூறியது போல சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல்கள் யார் என்று தெரிய வரும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

வழக்கை தாமதப்படுத்துவார்கள் என கூறி தங்க.தமிழ்செல்வன் மட்டும் தான் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அழிவை நோக்கி செல்கிறது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

Advertisment

எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் கட்சி சார்பில் தேர்தலை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.