Advertisment

ஸ்டாலினிடம் பலத்தை காட்ட தயாராகும் தங்க.  தமிழ்செல்வன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க. தமிழ்ச்செல்வன் திடீரென விலகி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அதை தொடர்ந்து தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர்களும் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்களும் தங்க. தமிழ்செல்வன் கட்சியில் இணைந்ததை கண்டு வாழ்த்து தெரிவித்து ஆதரவு கொடுத்தும் வருகிறார்கள்.

Advertisment

th

இந்த நிலையில் தான் தங்க தமிழ்ச்செல்வனும் தன் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தலைவர் ஸ்டாலினை அழைத்து தேனியில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் தான் தேனி அருகே உள்ள வீரபாண்டி கோவில் அருகே மூன்று ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து வருகிற 21ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

t

இந்த பொதுக் கூட்டத்திற்காக மேடை அமைக்க பந்தகால் நடும் விழாவில் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனுடன் தங்க. தமிழ்செல்வன் மற்றும் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்களான ஜெயக்குமார். கம்பம் செல்வேந்திரன், தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரர்களான மகாராஜன் சரவணக்குமார் உள்ளிட்ட சில உ.பி.கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கானபணிகளும் அசுர வேகத்தில் நடந்து வருகிறது.

இது பற்றி தங்க தமிழ் செல்வனின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது...

இந்த மாவட்டத்தில் அண்ணன் தங்க தமிழ்செல்வனுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. அதன் மூலம் அதிமுக, அ.ம.மு.க. மற்றும் பொதுமக்கள் என ஒரு தொகுதிக்கு ஆயிரம் பேர் என நான்கு சட்டமன்ற தொகுதிகளிலிருந்து 4 ஆயிரம் பேரை திரட்டி தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய வைத்து தன் பலத்தை காட்ட அண்ணன் தங்க. தமிழ்செல்வன் தயாராகி வருகிறார். அதனால் தான் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்று தன் ஆதரவாளர்களை கட்சியில் உறுப்பினராகவும் சேர்த்து வருகிறார். அந்த உறுப்பினர் பாரத்துடன் தான் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களை கட்சியில் சேர்க்க இருக்கிறார் என்று கூறினார்கள்.

ஆக வரும் 21ம்தேதி ஸ்டாலின் தேனி வருவதின் மூலம் தங்க. தமிழ்செல்வன் தன் பலத்தை காட்ட தயாராகி வருகிறார். அதன் மூலம் தங்க தமிழ் செல்வனுக்கு மாவட்ட பொறுப்பாளர் அல்லது மாநில பொறுப்பு ஏதும் தலைவர் ஸ்டாலின் கொடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் உபிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது. அ

Thangatamilselvan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe