Advertisment

அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடையும்! தங்க தமிழ்செல்வன் பேட்டி

ta

Advertisment

துணை முதல்வர் ஓபிஎஸ் -சின் சொந்த மாவட்டமான தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும், டிடிவியின் தீவிர ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘’ அதிமுகவில் இருந்து எங்களுக்கு அடிக்கடி அழைப்பு வருகிறது.

எங்களுடன் வந்து இணைந்து பணியாற்றுமாறு அமைச்சர்கள் பேசிவருகின்றனர். உண்மையில் அதிமுகவை விட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ளது. எனவே அவர்கள் தான் எங்களுடன் வந்து இணைய வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கும். ஏனென்றால் தேசிய கட்சிகளுக்கு மாநில நலனில் அக்கறை கிடையாது.

மாநிலத்தின் உரிமைகளான முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, ஸ்டெர்லைட், நீட்தேர்வு, கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி அமைத்தது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் தூக்கி எறிவார்கள். தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி. தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். ஆனால் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் ஆண்டிபட்டி தொகுதியில் கண்டிப்பாக போட்டி போடுவேன் என்று கூறினார். இந்த பேட்டியின்போது நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

thanga tamilselvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe