தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, மயிலாப்பூரில்- 173 வது வட்டம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் வசித்து வரும் 150 குடும்பங்களின் ரேஷன் கார்டுகள், தனிநபர் தொடர்ந்த வழக்கின் காரணமாககடந்த 22.12.2018 முதல், பெரும்பாக்கம் ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டன.
அன்று முதல், மயிலாப்பூர் - இளங்கோ தெரு மக்கள், பொங்கல் பரிசு மற்றும் ரேஷன் பொருட்களைக்கடந்த 2 வருடங்களாகப் பெற இயலவில்லை.தொடர்ந்து, இளங்கோ தெரு மக்கள் அங்கேயே வசிக்க, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கும் நிலுவையில் உள்ளது.
இன்றைய ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வறுமையில் வாழ்ந்து வரும் அவர்களுக்குத் தற்போது அரசு அறிவித்த கரோனா நிவாரணமும் வழங்கப்படவில்லை.அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே இளங்கோ தெரு மக்கள் வசிக்கும் சென்னை - மயிலாப்பூர் KG025 ரேஷன் கடையில் கரோனா நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt11.jpg)
தமிழச்சி தங்கபாண்டியன், உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்து, நிவாரணம் கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், மயிலாப்பூர், கோவிந்தசாமி நகர் - இளங்கோ தெரு மக்களுக்கு, மயிலாப்பூர் KG025 ரேஷன் கடையிலேயே, கரோனா நிவாரணம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.இளங்கோ தெரு மக்கள், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)