Advertisment

தாமிரபரணியில் தர்ப்பணம் செய்வதற்குத் தடையில்லை... நீர் நிலைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்றநாட்களில்,நீர் நிலைகளில், மறைந்த முன்னோர்களுக்காக, அவர்களது உறவினர்கள்தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடுவது இந்துமத நம்பிக்கை.

Advertisment

தென் மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையான ஏர்ல், முறப்பநாடு, பாபநாசம் போன்ற இடங்களில் மக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்காகக் கூடுவர். கடந்த 11 மாதங்களாக கரோனாவின் தாக்கம் காரணமாகக் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் பொருட்டுதர்ப்பணம் செய்யஅரசு தடை விதித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், கரோனா கட்டுக்குள் வந்ததால் தற்போது தடைநீக்கப்பட்டுள்ளது. இதனால், முக்கிய அமாவாசை தினமான இன்றைய அமாவாசையின் போது முறப்பாடு, பாபநாசம், குற்றால அருவிக்கரை உள்ளிட்ட தாமிரபரணியாறு சிவனாலயப் பகுதிகளில் மக்கள் தங்களது முன்னோர்கள், உறவினர்களுக்குத் தர்ப்பணம் செய்து சிவாலய வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனால் முக்கியப் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

rivers thai amavasai thamirabarani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe