தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தீபாவளி வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

thamimun ansari

Advertisment

அந்த வாழ்த்துச் செய்தியில், “இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. எல்லோரோடும் இணக்கம் காட்டி வாழும் அவர்களின் பண்பாடு சிறப்புக்குரியது. எமது அன்றாட பொழுதுகள் அவர்களின் தோழமையுடன் பயணிக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது நம் மண்ணின் பண்பாடு மட்டுமல்ல, வரலாறும் கூட. இந்நாளில் ; கல்வி வளர்ச்சி, பொது அமைதி, சமூக ஒற்றுமை, நாட்டின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் நலன், நீராதார பாதுகாப்பு என நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் எல்லோரும் இணைந்து பணியாற்ற உறுதியேற்போம்.

Advertisment

அண்ணன்-தம்பிகளாய் இன்று போல் என்றும் வாழ்வோம் எனக் கூறி, எமது பாசத்திற்குரிய இந்து சமுதாய சகோதர- சகோதரிகளின், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிட, தீபாவளி வாழ்த்துக்களை, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.